வியாழன், 25 டிசம்பர், 2014

மைக்கூ-5






காலாவதியான,பயன்பாட்டில் இருக்கிற
இனி வாங்கபோகிற என் பூட்டுகளுக்கெல்லாம்
உன்னிடம்  கள்ளசாவி உண்டு என்றறியாமல்
மீண்டும் மீண்டும் பூட்டிக்கொள்கிறேன் நான்


உன் மௌனக் குமிழ் மோதி
சிதைந்துபோகிறது என்
சொற்கோபுரங்கள்

உன் சின்ன புன்னகையை
சிறை செய்யத் தடுமாறும் மனம்
சர்க்கரை சுமந்த சிற்றெறும்பாய்





வயதை விலையாய் கொடுத்தபின்
ஈட்டிய தாள்களிலும் மதிப்பற்று
தொடர்கிறது பூஜியங்கள்.


பயணங்களில், சந்திப்புக்கு சந்திப்பு
சோதனைக்குள்ளாகிறது என் ஈகை
ரயில் யாசகர்கள்


பட்டாம்பூச்சிகளின் சிறகுபிய்த்து, காலொடித்து
பால்யம் கடந்தவர்களுக்குத்தான் வாய்க்குமோ
பள்ளிகூடங்களில் குண்டுவைக்கும் மனம்



குறும்பா -4




46 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. என்ன இப்படி பொசுக்குனு சொல்லிபுட்டு போய்டீங்க:((

      நீக்கு
  2. //உன் மௌனக் குமிழ் மோதி
    சிதைந்து போகின்றன என்
    சொற்கோபுரங்கள்!..//

    குறும்பா - அரும் பா!..

    பதிலளிநீக்கு
  3. //பட்டாம்பூச்சிகளின் சிறகுபிய்த்து, காலொடித்து
    பால்யம் கடந்தவர்களுக்குத்தான் வாய்க்குமோ
    பள்ளிகூடங்களில் குண்டுவைக்கும் மனம்//
    உண்மை உண்மை உண்மை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணா வெகுநாள் கழித்து வந்திருகிறீர்கள்:) மிக்க நன்றி அண்ணா!

      நீக்கு
  4. முதலிரண்டும் அகம், அடுத்தது குழந்தை முகம், அடுத்த மூன்றும் புறம் இப்படிப் புரிந்து படிக்கவே 4முறை படிக்க வேண்டியிருக்கிறது. கவிஞர்கள் தன் வாசகர்களை இப்படிப் படுத்தக் கூடாது. ஆனாலும் சொல்-சூழல் அழகில் சொக்கிப்போய் மீண்டும் மீண்டும் படிக்க வைக்கும் ஆற்றல் எப்படித்தான் இந்தச் சின்னக் கவிதைகக்குள் உனக்குமட்டும் சிக்குகிறதோ போ... முதற்குறும்பாவின் கரும்பு மென்மை அப்படியே மாறிமாறி அந்தக் கடைசிக்குறும்பாவில் இரும்பு வன்மையாய் இறங்கும்போது பொறிகலங்கிவிடுகிறதுப்பா.. வகைபிரித்துப் போட்டுக் கொஞ்சம் உதவக் கூடாதா தாயி?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் அண்ணா. வகை படுத்தும் போதே முதல் மூன்றும் அகம் ,அடுத்த மூன்றும் புறம் என வகுத்துகொண்டேன்:)))
      **கவிஞர்கள் தன் வாசகர்களை இப்படிப் படுத்தக் கூடாது.**ஹா..ஹா...ஹா..சாரி அண்ணா..பல்சுவையா இருக்குமேன்னு நினைத்துவிட்டேன்..
      இனி அவ்வாறே செய்கிறேன்:)) மிக்க நன்றி அண்ணா!

      நீக்கு
  5. வணக்கம்

    பா வரிகளை இரசித்தேன் அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி த.ம2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  6. கொழித்த குறும்பாவாற் கூறினீர் செய்தி!
    வலித்ததே ஈற்றுப்பா வந்து!

    அனைத்தும் அருமை தோழி!
    அனைவருக்கும் எல்லா நலன்களும் அமைய வேண்டி வாழ்த்துகிறேன்!

    பதிலளிநீக்கு
  7. சிதந்துபோகிறது - சிதைந்து போகிறதுன்னு மாத்திடும்மா. ரசனையோட குறும்பாக்களைப் புன்னகையோட படிச்சுட்டு வந்த மனசு கடைசிப் பாவைப் படிச்சதும் கனமாயிடுச்சு. அருமையா எழுதி அசத்திருக்க தங்கச்சி. (குறும்பாக்களை தொகுத்து வைத்துக் கொள்ளவும். நல்லதொரு புத்தகமாக மலரும் கனிகள் இவை).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாத்திட்டேன் அண்ணா:) நீங்க சொன்னா சரி:) மிக்க நன்றி அண்ணா!

      நீக்கு
  8. சிறப்பான குறும்பாக்கள்! ரசித்தேன்!

    பதிலளிநீக்கு
  9. அக்கா அசத்திட்டீங்க. வரிகளின் ஊடான உணர்வுகளுக்கு வலு சேர்க்கும் வார்த்தைகள் கச்சிதம். கடைசி பா உருவாக காரணமான நிகழ்வை நினைக்கும் போது மனது இன்னும் வலிக்கிறது அக்கா. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நினைத்தாலே பதறுகிறது சகோ:(( வருகைக்கு நன்றி சகோ:)

      நீக்கு
  10. கரும்பா இனிக்குது உங்க குறும்பா ,ரசித்தேன் :)
    த ம 4

    பதிலளிநீக்கு
  11. ///பட்டாம்பூச்சிகளின் சிறகுபிய்த்து, காலொடித்து
    பால்யம் கடந்தவர்களுக்குத்தான் வாய்க்குமோ
    பள்ளிகூடங்களில் குண்டுவைக்கும் மனம்///
    நன்று சொன்னீர் சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  12. ஆகா தொகுப்பு வெகு விரைவில் வந்துடும் போல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் அரசியலுக்கு வருவேன்னு , காலம் தான் பதில் சொல்லவேண்டும் என சிலர் இருபது வருசமா கதைவிடுவது போல நான் சொல்ல விரும்பவில்லை அண்ணா! இப்போ புத்தகம் வராது....எனது குறிக்கோள் வானம் அட்லீஸ்ட் சில மலைகளையாவுது எட்டியபின் பின்தான் இளைபாரலாய் புத்தகவெளியீடு. அது என் கவனத்தை திசை திருப்பகூடும்...ப்ளீஸ் அண்ணா கொஞ்சம் நாள் போகட்டும்:)@ நிலவன் அண்ணா!!
      --------------------
      @கஸ்தூரி
      நன்றி சகா:)

      நீக்கு
    2. வரும் ஆண்டிலேயே நான் முனைந்து அதைச் செய்யலாம்னு மனசுக்குள்ள நினைச்சிருந்தேன். இப்ப உன் மனசு புரிஞ்சிட்டு மைதிலி... நீயா பச்சைக்கொடி ஆட்டற வரைக்கும வெயிட்டிங்தான் இனி.

      நீக்கு
  13. குறும்பாக்கள் அருமை...
    வாழ்த்துக்கள் அருமை.

    பதிலளிநீக்கு
  14. குறும்பா இதுவோ குறுகாப்பா! கேட்கக்
    குறும்பா? இனிக்கும் கரும்பா? - வெறும்பா
    துரும்பாம்! அரும்....பா தரும்பா! எறும்பாய்
    உறுமென் இருகண்ணின் பா!

    அப்பா போதும்பா............................!!!!!!
    ஹ ஹ ஹா‘!!!!!

    த ம 7

    அது !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹப்பா!!! கிறிஸ்தமஸ் குறும்பா வேலைசெய்துவிட்டது:))))
      ஆமா அண்ணா , இது உங்களுக்கு நத்தார் பரிசு:) ஆனா ரிட்டர்ன் கிப்ட் அதைவிட அசத்தலா இருக்கே:((
      நன்றி அண்ணா!

      நீக்கு
  15. ****காலாவதியான,பயன்பாட்டில் இருக்கிற
    இனி வாங்கபோகிற என் பூட்டுகளுக்கெல்லாம்
    உன்னிடம் கள்ளசாவி உண்டு என்றறியாமல்
    மீண்டும் மீண்டும் பூட்டிக்கொள்கிறேன் நான்***

    பொய்!!! எல்லாப் பூட்டுக்குமே "அவரிடம்" கள்ளச்சாவி இருக்கும் என்கிற தைரியத்தில்தான் மறுபடியும் பூட்டிக்கொள்கிறார்!! :)

    ------------------------------

    ***உன் மௌனக் குமிழ் மோதி
    சிதைந்துபோகிறது என்
    சொற்கோபுரங்கள்***

    மெளனம் நிரந்தரமாக இருக்க முடியாதே..
    சிதைந்த சொற்களை மீண்டும் ஒன்றுகூட்டி அன்பு கணைகளாக மறுபடியும் அட்டாக் செய்ய வேண்டியதுதான். :)

    --------------

    ****பட்டாம்பூச்சிகளின் சிறகுபிய்த்து, காலொடித்து
    பால்யம் கடந்தவர்களுக்குத்தான் வாய்க்குமோ
    பள்ளிகூடங்களில் குண்டுவைக்கும் மனம்**

    They usually make a "deal" with the "God" before doing anything like this. They imagine that God would be pleased to see such an act too. People follow religion to become a "better person". But in reality, Religious people are the least tolerant people in the world. "The God" they created corrupts their mind I believe. We cant blame "The God". We can only blame the creator of the "God", the ignorant human beings!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வருண்:)

      **பொய்!!! எல்லாப் பூட்டுக்குமே "அவரிடம்" கள்ளச்சாவி இருக்கும் என்கிற தைரியத்தில்தான் மறுபடியும் பூட்டிக்கொள்கிறார்!! :)** அப்பா! வருன்கிட்ட இருந்து யாரவாது தப்ப முடியுமா?? கண்டுபிடிசுட்டாரே!!
      --------------
      என்னமோ போங்க:(( எல்லோருக்கும் வீக்னெஸ் இருக்கு.... சிலர் அதை கேவலமா, கொடூரமா வெளிபடுத்திவிடுகிறார்கள் என்று தோன்றுகிறது... even rationalist too irrational sometime...recent invention:) O! good homer sometime nodsஅப்டின்னு இதை முதலிலேயே சொல்லிவிட்டார்களோ:)) சரி அது எனக்கு இப்போதான் புரிஞ்சது அப்படின்னு சொல்லணுமோ??
      take it easy VN:)

      நீக்கு
    2. //But in reality, Religious people are the least tolerant people in the world// a very painful reality

      நீக்கு
  16. ” பட்டாம்பூச்சிகளின் சிறகுபிய்த்து, காலொடித்து
    பால்யம் கடந்தவர்களுக்குத்தான் வாய்க்குமோ
    பள்ளிகூடங்களில் குண்டுவைக்கும் மனம்”
    சூப்பர்டா மனம் கனக்கச்செய்யும் வரிகளின் உண்மை...அசத்து அசத்து...

    பதிலளிநீக்கு
  17. ஆஹா, எதைப் பாராட்டுவது, எதை விடுவது என்றே தெரியவில்லை.
    ஒவ்வொரு வரியையும் ரசித்து படித்தேன்.

    பதிலளிநீக்கு
  18. குறும்பாவாயின் என்?
    மூர்த்தி சிறிதாயினும் கீர்த்தி பெரிதன்றோ!

    பதிலளிநீக்கு
  19. சிக்கனமா யேசிறைவைக் கின்றாய் எமைநீ
    பக்குவமாய் பார்த்தோர் வியக்கவே! சிற்றெறும்பாய்
    விடயத்தை சேகரித் தேநொடி போல்தான்
    விடைகேக்கி றாய்விநோதம் தான்!

    குறும்பாக இல்லை அரும்பா விதுவே
    நறுமணம் வீசிடவே நாம்விரும் பும்குறும்பா
    வன்றோ! சிந்தனையை தூண்டவே துலங்குமே
    இன்னலைசொல் லும்இன் கவி!

    அருமைடா அம்மு ! தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  20. வயதை விலையாய் கொடுத்தபின்
    ஈட்டிய தாள்களிலும் மதிப்பற்று
    தொடர்கிறது பூஜியங்கள்...

    ............. ( பின்னூட்டமிட்டு இந்த வரிகளை கெடுக்க மனமில்லை ! )

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு
  21. அன்புச் சகோதரி,

    குறும்பா அரும்பா அரும்பியது அருமை!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  22. வாலில்லாமல் வால்தனம் செய்யும் உன் குறும்புகளை ரசிக்கிறேன்......வார்த்தைளிடம்

    பதிலளிநீக்கு