வியாழன், 29 ஜனவரி, 2015

குறும்பாவில் பட்ட விழுப்புண்கள்!

      



                   தலைப்புக்காக விஜூ அண்ணா என்னை மன்னிப்பாராக!! சில சமயம் நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் நம்மை படுத்தி எடுத்துவிடும். செலவழிந்த பணத்தை கூட சம்பாரித்துக் கொள்ளலாம், ஆனா விட வார்த்தையை மீட்க முடியாது இல்லையா?


               
    எனக்கு ஓரளவு வரையத்தெரியும். வளைகோடுகள் எல்லாம் பார்த்த மாத்திரத்தில் வரைந்து விடுவேன். கோலம் வரையும் போது வளைகோடுகளுக்காக இடம் மாறாமல் நின்ற இடத்தில் நின்றபடி இடப்பக்கமும், வலபக்கமும் வரையும் என்னை திறமையை(!?) என் அத்தை (மாமியார்) தன் தோழிகளிடம் பெருமையாக சொல்வதுண்டு. ஆனால் ஒரு கட்டம் வரைய சொன்னீங்கன்ன என்னால் முடியாது. அட ! ஒரு கோடுகூட நேர போடத்தேரியாதுன்னா பார்த்துகோங்களேன்:)) 
           
                   அதே போலதான் நேர்கோட்டு, இலக்கணச் சட்டத்துக்குள் அடங்கும் மரபுக்கவிதைகள்.  எனவே எனக்கு தோன்றிய, என்னுள் தோன்றிய, கவிதைகள் அப்படியே எழுதிவிடுவேன். அப்படி குட்டிகுட்டியாய் தோன்றுகிற கவிதைகளுக்கு ஹைக்கூ என்று நான் தலைப்பிடுவதில்லை. ஏனென்றால் எனக்கு நன்றாக தெரியும் நான் எழுதிய எதுவும் ஹைக்கூ இல்லை என்று. நிர்மலா சுரேஷ் அவர்கள் தனது ph.d ஆய்வுக்காக ஹைக்கூ என்றால் என்ன என்று விரிவாக எழுதிய புத்தகத்தை படிக்க நேர்ந்தால், உங்களுக்கும் தெரியும், இன்றைய பெரிய இலக்கிய மேதாவிகள் எழுதியிருக்கும் பலவும் ஹைக்கூ இல்லை என்று. எனவே என் குறுங்கவிதைகளுக்கு குறும்பா என பெயர் சூட்டினேன். 
  
              அசிஸ்டன்ட் டைரெக்டர் blog திரு. நந்தன் ஸ்ரீதர் அண்ணா குறும்பாவை பற்றி நிறைய சொன்னார். லிமரிக் வகை கவிதையின் தமிழ் முயற்சி தான் குறும்பா என பெயர்பெற்றதாகவும், அதன் வரலாறு மற்றும் கட்டமைப்பு, அதாவது இலக்கணம். அதற்கு மிக அழகான உதாரணம் ஒன்றை மேற்கோள் காட்டியும் இருந்தார்.

வள்ளுவரும் மாணவராய் ஆனார்.
திருக்குறளில் தேர்வெழுதப் போனார்
முடிவு வெளியாச்சு...
அந்தோ ஃபெயிலாச்சு…
பாவம் அவர் படிக்கவில்லை கோனார்

இப்போ உங்களுக்கே இந்த இலக்கணம் புரிந்திருக்கும். ஆம் ஐந்து வரிகள் இருக்கவேண்டும். முதல் இரு வரிகளுக்கும், கடைசி வரிக்கும் இயைபு, அதாவது ரைம் இருக்கணும் மூணாவது, நாலாவது வரி ஒரே ரைமில் முடியணும். இது எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, படைப்பாளியின் சுதந்திரத்திற்கு எந்த எல்லையும் இல்லை. எந்த இலக்கணமும் இல்லை. so இதே பேரில் தொடர்ந்து இந்த கவிதைகளை எழுதுவது உங்கள் தனிப்பட்ட விருப்பம் என்று கடைசியாகச் சொல்லி, சான்றோர்க்கு சான்றாய் வாதத்தை வைத்தார். ஏற்கனவே ஹைக்கூக்கள் பல கழுத்து நெரிந்து கொண்டிருக்கும் வேளையில், நாம்  இப்படி லிமரிக் (குறும்பா) வகையையும் கொலை செய்யவேண்டாம் என்ற முடிவுக்கு வந்தவளாய் என் குறுங்கவிதைகளுக்கு நல்ல பெயர் தேடிக்கொண்டிருக்கிறேன். காசியானந்தன் அய்யா அவர்கள் நறுக்கு என்று தான் நறுக்குத் தெரித்தார் போல் எழுதும் கவிதைகளுக்கு பெயர்வைத்துவிட்டபடியால்,  நான் நறுக்கு என்று எழுதினால் என் படைப்பை, அவர் படைப்போடு ஒப்பிடும் ஒரு துர்பாக்கிய நிலை அவர்க்கும் ஏற்படும். துளிப்பா ரொம்ப தூங்குற மாதிரி இருக்கு. நிறைக்கும், மகிக்கும் பேர் வைக்கையில் கூட இவ்ளோ யோசிக்கவில்லை. பெயர் வைப்பது குறித்த என் ஒரு கவிதை படிச்சுகிட்டு இருங்க. நான் பெயர் தேடப்போறேன்.

50 கருத்துகள்:

  1. சிறந்த பதிவுதான் புகைப்படம் அருமை குறும்பா விரும்பக்கீடியதே... வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் அக்கா
    தங்களின் கவிதை பொருள் நிறைந்ததாகவும் அதே சமயம் அடர்த்தியான சொற்களைக் கொண்டதாகவும் இருக்குமென்பதை நான் அறிவேன். அப்படி இருக்கையிலே நீங்கள் தான் எழுதும் கவிதைக்கு பெயர் தேடுவதாக சொன்னால் எந்த ஊரு நியாயம்?. மனதில் பட்டதை நறுக்கென்று கவிதையில் மட்டுமல்ல அக்கா இப்பதிவில் பதிந்திருக்கிறீர்கள். மனசாட்சிக் கவிதையை மீண்டும் ஒருமுறை படித்து மகிழ்ந்தேன். பகிர்வுக்கு நன்றி அக்கா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனது கவிதைகளை பற்றிய உங்கள் மதிப்புக்கு மிக்க நன்றி சகோ! நீங்க எல்லாம் கவிதை என்று ஏற்றுகொண்டதால் தான் நானும் இதை கவிதை என நம்புகிறேன்:))))) இப்போ ஒரு பேர் கிடைத்திருக்கிறது. பாப்போம்:)

      நீக்கு
  3. நல்ல பெயராக தேடிக் கண்டுபிடித்து வாருங்கள் சகோதரியாரே
    தம 1

    பதிலளிநீக்கு
  4. வளைவு கோலம் போடுவதில் கில்லாடியா நீங்கள்...அதுக்கும் எனக்கும் ரொம்ப தூரம் :))
    நல்லத் தமிழ் பேரா வையுங்க டியர்.. :)
    அப்புறம், அதன் பயன்படுத்தும் உரிமையும் எனக்குக் கொடுத்துவிடுங்கள்.. :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிடைச்சுடுச்சு டியர்! பின்ன உங்களுக்கு இல்லாத உரிமையா!!:))

      நீக்கு
  5. கதை எழுதுவதைவிட கவிதை எழுதுவதில் சிரமங்கள் உணர்ந்துள்ளேன். கவிதை எழுதுதலில் தங்களது அனுபவத்தை ரசித்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமா சார்! அதுக்கு தலைப்பு வைக்கிறது தான் ரொம்ப கஷ்டம்:)

      நீக்கு
  6. கவிதைக்கு வந்த சோதனையை என்னவென்று சொல்ல !! சீக்கரம் கண்டுபிடித்துவாருங்கள் அக்கா !

    என்ன காரணமோ தெரியவில்லை , செய்யுள் வரிகள் ஓரளவு படித்திப்புரிந்துகொள்வேன் . புதுக்கவிதை எனக்குக்கொஞ்சம் தூரம் தான் .

    தம+

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காதல் தொடர் எழுதியவருக்கு கவிதைகள் தூரமா????!!!!!!! ரொம்ப சீக்கிரம் கவிதை எழுத ப்ராபிரஸ்து:))))

      நீக்கு
    2. அக்கா ! இதுவரைக்கும் நல்லாத்தானே போய்ட்டுருக்கு . திடீர்னு இப்படிலாம் சொல்லி என் மனச கலைச்சிடாதிங்க . நான்லாம் 'அ' போட்டு எழுத ஆரம்பிச்சா னௌ வரைக்கும் எல்லாத்தையும் எழுதித்தள்ளுற ஆள் . என்னோட சிறுகதை இதுவரைக்கும் 500 வார்த்தைக்கு கீழ ஒன்னுக்கூட இல்ல . ஒருவேளை கவிதை பக்கம் வந்தா , கவிதையே கதறிடும் அளவுக்கு ரணகொடூரநீளமாகத்தான் என்னோடது இருக்கும் . அதனால் கவிதைகளை பேணி , பாதுகாத்து வளர்த்தும் பொருப்பைத்தாங்களே கவனித்துவிடுவீர்களாக .

      நீக்கு
  7. இந்த பதிவுக்கு என்ன கருத்து சொல்லலாம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்?

    பதிலளிநீக்கு
  8. வள்ளுவரும் மாணவராய் ஆனார்.
    திருக்குறளில் தேர்வெழுதப் போனார்
    முடிவு வெளியாச்சு...
    அந்தோ ஃபெயிலாச்சு…
    பாவம் அவர் படிக்கவில்லை கோனார்

    அருமை....

    நல்ல பெயரோடு வாருங்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது நான் எழுதிய லிமரிக் இல்லை:))
      நன்றி அண்ணா! பேரோடு வருகிறேன்:)

      நீக்கு
  9. //நிறைக்கும், மகிக்கும் பேர் வைக்கையில் கூட இவ்ளோ யோசிக்கவில்லை// - இதை நான் நினைவில் விடாப்பிடியாக வைத்திருந்து, நிறையும் மகியும் வருங்காலத்தில் வலைப்பூ எழுத வரும்பொழுது உங்களைப் போட்டுக் கொடுக்காவிட்டால், பாருங்கள்! :-P

    பெயர் எதுவாக இருந்தால் என்ன சகா? படைப்பு தரமாக இருக்கிறதா என்பதுதான் விதயம். உங்கள் பாக்களின் தரம் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை; புகழ வேண்டுமானால் செய்யலாம். தயங்காமல் எழுதுங்கள்! பெயர் வேண்டுமானால் தொட்டிலில் போடும்பொழுது... இல்லையில்லை, பதிவில் போடும்பொழுது வைத்துக் கொண்டால் போகிறது.

    எத்தனையோ ஐக்கூக்களைப் படித்திருக்கிறேன். ஆனால், ஐக்கூவுக்கென இலக்கணம் இருப்பது தெரியாது. லிமரிக், லிமரைக்கூ பாக்களும் படித்திருக்கிறேன்; இந்தப் பா வகைகளைத் தமிழுலகுக்குக் கொண்டு வந்தவரான தமிழன்பன் ஐயா அவர்களின் பா நூல்களுக்கே படி திருத்தம் (proof reading) செய்திருக்கிறேன்; நீங்கள் மேலே எடுத்துக்காட்டியிருக்கும் அதே லிமரிக்கையும் இதற்கு முன்பே படித்திருக்கிறேன்; இவ்வளவும் இருந்தும் என்ன பயன்? எனக்கு லிமரிக் இலக்கணம் பிடிபடவில்லை. (ஆனால், லிமரிக், லிமரைக்கூ ஆகியவற்றுக்கு இலக்கணம் உண்டு என்று மட்டும் தெரியும்). நீங்கள் தந்த விளக்கம் எனக்கு அதை மிக எளிமையாகப் புரிய வைத்துவிட்டது. மிக்க நன்றி!

    ஆனால், நான் உங்களைப் போல ஈவு இரக்கமெல்லாம் பார்க்கப் போவதில்லை; லிமரிக் இருந்தாலென்ன பிழைத்தாலென்ன என்று அதே பெயரில் எழுதிப் பார்ப்பதாக முடிவு கட்டிவிட்டேன். :-D

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ** இதை நான் நினைவில் விடாப்பிடியாக வைத்திருந்து, நிறையும் மகியும் வருங்காலத்தில் வலைப்பூ எழுத வரும்பொழுது உங்களைப் போட்டுக் கொடுக்காவிட்டால், பாருங்கள்! :-P** ரொம்ப சந்தோசம். இன்றைய உலகில் ஒரு நல்ல நட்பின் அடையாளம் இதுதான்:)))))))


      **நீங்கள் தந்த விளக்கம் எனக்கு அதை மிக எளிமையாகப் புரிய வைத்துவிட்டது. மிக்க நன்றி!** நெஜமாவா???? !!!!! நன்றி! நன்றி! நன்றி சகா:)


      **இந்தப் பா வகைகளைத் தமிழுலகுக்குக் கொண்டு வந்தவரான தமிழன்பன் ஐயா அவர்களின் பா நூல்களுக்கே படி திருத்தம் (proof reading) செய்திருக்கிறேன்;** எவ்வளோ பெரிய அப்பட்டக்கர் எல்லாம் நம்ம ப்லாக் படிக்கிறாங்க!!!!
      **ஆனால், நான் உங்களைப் போல ஈவு இரக்கமெல்லாம் பார்க்கப் போவதில்லை; லிமரிக் இருந்தாலென்ன பிழைத்தாலென்ன என்று அதே பெயரில் எழுதிப் பார்ப்பதாக முடிவு கட்டிவிட்டேன். :-D** உங்கள் லிமரிக் கவிதைகளை படிக்க ஆவலோடு காத்திருக்கிறேன் சகா:) வாழ்த்துகள்!

      நீக்கு
  10. நல்ல தேடல்மா. உன் கவிதை போலவே இதிலும் கவனம் செலுத்துவது அவசியம்தான். நானும் தேடிக்கொண்டுதான் இருக்கிறேன். நீ நலலதாகச் சொன்னால் மிகவும் மகிழ்ச்சிதான்.
    மரபு நெகிழ்ந்து இலக்கணம் படிக்காதவர்கள் எழுதும் கவிதைக்குப் பெயர்வைப்பது பற்றிய விவாதம் தமிழில் நெடுங்காலம் நடந்தது. பாரதி தொடங்கியபோது அவன் எதுவும் வகைபிரிக்காமலே “தீ இனிது” என்று எழுதியதை “வசனகவிதை“ என்று தமிழ் உலகம் ஏற்றுக் கொண்டது. “நியு வெர்ஸெ“ என்று க.நா.சு, ந.பிச்சமூர்த்தி உள்ளிட்டவர்கள் சொல்லிக் கொண்டிருந்தபோது, எழுத்து இதழில் சி.சு.செல்லப்பா “புதுக்கவிதை“ என்று போட்டுவிட்டார். வானம்பாடிகள் (1970களில்) புயலாகப் புறப்பட்ட போது, மரபுப் புலவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். (ஜெயகாந்தனும் புதுக்கவிதைக்கு எதிராக நின்றவர்களில் ஒருவர்!) பின்னர் க.நா.சு.உள்ளிட்டவர்கள் தாமே அதைச் சொன்னதாகச் சொன்ன வரலாறு பெரிது. இதே போல ஜப்பானியக் கவிதையான “ஐக்கூ“வை முதலில் அறிமுகப்படுத்தியதும் பாரதிதான். அவர் இதற்குப் பெயர் வைக்காமலே போய்விட்டார். அப்துல் ரகுமான்தான் தமிழில் இதைப்பிரபலப்படுத்தினார். கவிஞர் மீரா இதை “குக்கூ” என்றார். காசி ஆனந்தன் “நறுக்கு“என்றார். ஆனால் ஐக்கூ எனும் பெயரே நிலைத்திருக்கிறது. பின்னர் வந்த “லிமெரைக்கூ“ என்பதை தமழன்பன் முயற்சிசெய்தார் ரகுமான் தொடர்ந்தார் ஆனால் தமிழில் ஜப்பானிய வடிவத்தை மட்டும் எடுத்துக் கொண்டு -அவர்களின் சீர் அளவை மீறி- தமிழில் ஐக்கூ நிலைத்துவிட்டது போல லிமெரைக்கூவும் இப்போது பலரால் எழுதப்டுகிறது. ஏற்கெனவே தமிழில் இருக்கும் விடுகதை, பிசி அந்தாதி எலலாம் கலந்து வருகிறது. நல்லதொரு பெயரை நீ கண்டுபிடித்தால் வரலாறு வரவேற்கும்.நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணா! எத்தனை நுனிக்கமான தகவல்கள்!!!குறிபெடுத்து கொள்ள போகிறேன்.
      **நல்லதொரு பெயரை நீ கண்டுபிடித்தால் வரலாறு வரவேற்கும்.நன்றி** நான் இப்போது யோசித்திருக்கும் பெயர், இந்த எதிர்பார்ப்பை ஈடு செய்யுமா என தெரியவில்லையே:(( நாளை தொலைபேசுகிறேன் அண்ணா!

      நீக்கு
  11. உனது சுயமான கவிதை பற்றிய சிந்தனைக்கு வாழ்த்துகளுடன்,
    என் தமிழ்மண வாக்கு எண்-7

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அண்ணா! தங்கள் வாக்கு தங்கள் வாழ்த்தை போலவே விலைமதிப்பற்றது:)

      நீக்கு
  12. அருமையான கவிதை வகைமகள் குறித்த அனுபவம்.
    கற்றுக் கொள்கிறேன் சகோ!
    நன்றி.
    த ம 8

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னது ?? கத்துக்குறீகளா!!!! இதை தான் கஸ்தூரி கோணியை போட்டு மூடி அடிக்கிறதுன்னு சொல்லுவாரோ!!!@#@#

      நீக்கு
  13. மனச்சாட்சிக் கிட்டபெயர் மகிழ்நிறை..... ஆஹா அது சிறந்த யோசனையல்லவா?

    குறும்பாவை நறும்பாவாய் வடிப்பாய்
    வெறும்பாவென எண்னேனே நான்.
    கிறுக்கல் என்றும் சிரியேன்.
    மறுக்கவே இயலாத யதார்த்தம் இருக்கும்
    குறும்பும் அதிலே குன்றாதிருக்கும்.
    குறுகுறுக்கும் கண்களில் காணும் காட்சிகள் யாவையும்
    சுறுசுறுப்போடு சுட்டிக் காட்டுவாய் சுதந்திரமாய்.
    வெறுக்காமல் விரும்புவர் அனைவரும்.எனவே
    மறுப்பே சொல்ல முடியாதபடி பெயரைவை மேலும் சிறக்கும் !

    அம்முக்குட்டி தாமதத்திற்கு மன்னிக்கவும்.
    நிலவன் அண்ணா சொன்னது போல் அதிசிறந்த கவிதைகள்மா அனைத்தும். சிந்தனைச் செம்மலே தொடருங்கள். வாழ்த்துக்கள்மா ...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா!! கவிதை காட்டாறு வெள்ளமாய் பாயுதே!! அதுவும் எனக்கு!! மிக்க நன்றி செல்லம்:)) இப்படி ஆளாளுக்கு EXPECTATION LEVELளை ஏத்தாதீங்கப்பா! நான் பாவம்:)))) நன்றி இனியாச்செல்லம்:)) சிந்தனை செம்மலா?? இந்த லொள்ளு தானே வேணாங்குறது:)))

      நீக்கு
  14. நான் அப்புறமாக வந்து என் விமர்சனத்தைத் தருகிறேன். ஐயா ரொம்ப பிஸியாக்கும்!

    இல்லை.. "அருமையான பதிவு" "சபாஷ் பிரமாதம் மைதிலி" என்றெல்லாம் இவ்விடத்தில் வருண் மட்டும் பின்னூட்டமிட்டு தப்பிக்க முடியாது. அதனால ஆற அமர வாசிச்சுட்டுட்டு வர்ரேன். :))))

    பதிலளிநீக்கு
  15. நல்ல பதிவு சகோதரி! உங்கள் தேடல் தொடர வாழ்த்துக்கள். தேடல் இருந்தால்தான் அறிவு வளரும்னு யாரோ சொல்லிக் கேள்வி..ம்ம்ம்னீங்களே மிக்க அறிவாளி!!

    அயோ பாவம் திருவள்ளுவர் ஃப்யிலா? அவரு எத்தனைபேரை தன் குறள் படிக்க வைகச்சு .......இது கள்ளாட்டம்.. பேப்பர் ரிவால்யுவேஷனுக்கு அனுப்புங்கப்பா......ஹஹஹ்ஹ்

    இதுல கொஞ்சம் டி ஆர் எட்டிப் பார்க்கறாரோ!!!!!!

    பதிலளிநீக்கு
  16. ***செலவழிந்த பணத்தை கூட சம்பாரித்துக் கொள்ளலாம், ஆனா விட வார்த்தையை மீட்க முடியாது இல்லையா?***

    இதென்னங்க "மைதிலி பஞ்ச்"சா!!! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியெல்லாம் உரிமை கொண்டாட மாட்டேன். நிறைய படத்தில் இந்த டையலாகை யூஸ் பண்ணிருக்காங்க பாஸ்:))

      நீக்கு
  17. ****எனக்கு ஓரளவு வரையத்தெரியும். வளைகோடுகள் எல்லாம் பார்த்த மாத்திரத்தில் வரைந்து விடுவேன். கோலம் வரையும் போது வளைகோடுகளுக்காக இடம் மாறாமல் நின்ற இடத்தில் நின்றபடி இடப்பக்கமும், வலபக்கமும் வரையும் என்னை திறமையை(!?) என் அத்தை (மாமியார்) தன் தோழிகளிடம் பெருமையாக சொல்வதுண்டு. ஆனால் ஒரு கட்டம் வரைய சொன்னீங்கன்ன என்னால் முடியாது. அட ! ஒரு கோடுகூட நேர போடத்தேரியாதுன்னா பார்த்துகோங்களேன்:)) ***

    என்னை ரொம்பவே யோசிக்க வச்சுட்டீங்க! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யோசிக்கலேன்னா தான் அதிசயம்:)
      ** ஆனால் ஒரு கட்டம் வரைய சொன்னீங்கன்ன என்னால் முடியாது** இந்த வரியை உங்க ஸ்டைல எழுதிருக்கேன்:)

      நீக்கு
  18. ***அதே போலதான் நேர்கோட்டு, இலக்கணச் சட்டத்துக்குள் அடங்கும் மரபுக்கவிதைகள். எனவே எனக்கு தோன்றிய, என்னுள் தோன்றிய, கவிதைகள் அப்படியே எழுதிவிடுவேன். அப்படி குட்டிகுட்டியாய் தோன்றுகிற கவிதைகளுக்கு ஹைக்கூ என்று நான் தலைப்பிடுவதில்லை. ஏனென்றால் எனக்கு நன்றாக தெரியும் நான் எழுதிய எதுவும் ஹைக்கூ இல்லை என்று. நிர்மலா சுரேஷ் அவர்கள் தனது ph.d ஆய்வுக்காக ஹைக்கூ என்றால் என்ன என்று விரிவாக எழுதிய புத்தகத்தை படிக்க நேர்ந்தால், உங்களுக்கும் தெரியும், இன்றைய பெரிய இலக்கிய மேதாவிகள் எழுதியிருக்கும் பலவும் ஹைக்கூ இல்லை என்று. எனவே என் குறுங்கவிதைகளுக்கு குறும்பா என பெயர் சூட்டினேன். ***

    எதையுமே எதற்குள்ளாவது வகைப்படுத்தணும்னு நினைத்தால், முயன்றாலே வம்புதான்.

    இலக்கணம் முதலில் தோன்றி அதன் பின் இலக்கியம் தோன்றியிருந்தால் இப்போ உள்ள இலக்கியங்களில் 10 விழுக்காடுகள்தான் தோன்றியிருக்கும் என்பது என் கணிப்பு. :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. **
      இலக்கணம் முதலில் தோன்றி அதன் பின் இலக்கியம் தோன்றியிருந்தால் இப்போ உள்ள இலக்கியங்களில் 10 விழுக்காடுகள்தான் தோன்றியிருக்கும் என்பது என் கணிப்பு. :)***
      well said வருண்:) இதை தான் என் தமிழாசான் அண்ணா ரவி அவர்களும் சொல்வார்:)

      நீக்கு
  19. ***இப்போ உங்களுக்கே இந்த இலக்கணம் புரிந்திருக்கும். ஆம் ஐந்து வரிகள் இருக்கவேண்டும். முதல் இரு வரிகளுக்கும், கடைசி வரிக்கும் இயைபு, அதாவது ரைம் இருக்கணும் மூணாவது, நாலாவது வரி ஒரே ரைமில் முடியணும். இது எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, படைப்பாளியின் சுதந்திரத்திற்கு எந்த எல்லையும் இல்லை. எந்த இலக்கணமும் இல்லை. so இதே பேரில் தொடர்ந்து இந்த கவிதைகளை எழுதுவது உங்கள் தனிப்பட்ட விருப்பம் என்று கடைசியாகச் சொல்லி, சான்றோர்க்கு சான்றாய் வாதத்தை வைத்தார். ஏற்கனவே ஹைக்கூக்கள் பல கழுத்து நெரிந்து கொண்டிருக்கும் வேளையில், நாம் இப்படி லிமரிக் (குறும்பா) வகையையும் கொலை செய்யவேண்டாம் என்ற முடிவுக்கு வந்தவளாய் என் குறுங்கவிதைகளுக்கு நல்ல பெயர் தேடிக்கொண்டிருக்கிறேன். காசியானந்தன் அய்யா அவர்கள் நறுக்கு என்று தான் நறுக்குத் தெரித்தார் போல் எழுதும் கவிதைகளுக்கு பெயர்வைத்துவிட்டபடியால், நான் நறுக்கு என்று எழுதினால் என் படைப்பை, அவர் படைப்போடு ஒப்பிடும் ஒரு துர்பாக்கிய நிலை அவர்க்கும் ஏற்படும். துளிப்பா ரொம்ப தூங்குற மாதிரி இருக்கு. நிறைக்கும், மகிக்கும் பேர் வைக்கையில் கூட இவ்ளோ யோசிக்கவில்லை. பெயர் வைப்பது குறித்த என் ஒரு கவிதை படிச்சுகிட்டு இருங்க. நான் பெயர் தேடப்போறேன்.***

    நல்லவேளை உங்க "பெயர் தேடலை" கவிதைவடிவில் சொல்லவில்லை! அதனால எனக்கும் புரிஞ்சிருச்சு. புரிஞ்சென்ன பிரயோஜனம்? :(



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா....ஹா....ஹா....எந்த INFORMATION னும் வீணாகாது. எப்போதாவது யூஸ் ஆகும் பாருங்க:) மிக்க நன்றி வருண், திரும்பவும் வந்து, டைம் எடுத்து படிச்சு, சின்சியரா கருத்து சொன்னதுக்கு:)

      நீக்கு
  20. உதாரணத்தை வைத்துக் கொண்டு முயற்சித்துப் பார்க்கிறேன்! நன்றாக வந்ததாகத் தோன்றினால்(தான்) வெளியில் சொல்வேன்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா....ஹா...ஹா....உங்கள் லிமரிகை விரைவில் எதிர்பார்க்கிறேன்:)

      நீக்கு
  21. இந்த குழப்பம் எனக்கும் வந்ததால் தான் ,கவிதைப் போல் (?) எனக்கு காட்சி அளித்தால் ,சிரிகவிதை என்றே பெயர் சூட்டிவிட்டேன் :)
    ரோஜாவுக்கு எந்த பெயர் சூட்டினால் என்ன ,அதன் அழகுதானே கவரும் ?.உள்ளடக்கத்தைப் பொறுத்து பொருத்தமான பெயரை வைத்து விட வேண்டியதுதான் :)
    த ம 11 (மகுடம் சூட்டிட்டேன்,சந்தோசத்தில் இனிமேல் எளிதாய் யோசிக்க முடியும்; )

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாஸ் சொல்லி பலிக்காம போகுமா:)) கிடைத்திருக்கு பாஸ்! விரைவில் சொல்கிறேன்:) மிக்க நன்றி!

      நீக்கு
  22. லிங்குசாமி தனது தனது கவிதைக்கு லிங்கூ என்று பெயர் வைத்தார்
    அது போல் ஒரு பெயர் வையுங்கள்.
    கிட்டத் தட்ட இவையும் மரபுக்கவிதைகள் போல்தான் உள்ளன . இதிலும் சுதந்திரம் பறிக்கப் படுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணா
      கோடானுகோடி நன்றி!! செம ஐடியா!!! ஒரு பேர் க்ளிக் ஆகிடுச்சு:)) விரைவில் சொல்கிறேன்:)

      நீக்கு
  23. நான் எழுதும் வரிகளுக்கு என்ன பெயர் என்று நானும் யோசித்ததுண்டு
    ஒருமுறைகூட நானெழுதியகவிதை என்று எழுதியது கிடையாது
    ப்லாக் வரதுக்கு முன்பாவது எப்பவாவதுசொல்வதுண்டு இப்பல்லாம்
    ம்கூ.........ம அதனால்தான் மலரின் வாசம் என்று எழுதினேன்.பெயர்கிடைக்கவாழ்த்துக்கள்டீச்சர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா....ஹா...ஹா...வாங்க டீச்சர் ! சேர்ந்தே முயற்சி செய்வோம்:) மிக்க நன்றி:)

      நீக்கு
  24. அன்புச் சகோதரி,

    ‘குறும்பாவில் பட்ட விழுப்புண்கள்!’ பார்த்து மகிழ்ந்தேன். திரு. நந்தன் ஸ்ரீதர் லிமரிக் வகை கவிதையின் தமிழ் முயற்சிதான் ஹைகூ ... அதற்கு இலக்கணத்தைப் பற்றியும் கூறியதை கூறியிருந்தீர்கள். குறும்பா பற்றி அரும்பிய சிந்தனையைக் கண்டு களித்தேன்.

    மனச்சாட்சி பெயர் வைத்த கவிதையைப் படித்தேன். அரும்பா!

    நன்றி.
    த.ம.13

    பதிலளிநீக்கு